ஜோதிட முறைகள்

ஜோதிடம்
ஒருவருடைய பிறந்த தேதி பிறந்த நேரம் பிறந்த ஊர் இவை அனைத்தையும் பயன்படுத்தி…
அவருடைய வாழ்க்கை போன ஜென்மத்தில் அல்லது பல ஜென்மங்களாக அவர் எடுத்த செயல்பாடுகள் இந்த பிறப்பில் என்ன நிலையை அடைகின்றார் என்றும், அவருடைய பாட்டன் பாட்டி தாத்தா ஆத்தா அவருடைய பெற்றோர்கள் அவருடைய மனைவி அவருடைய மக்கள் அவருடைய வாரிசுகள் அவருடைய தொழில் அவருடைய இந்த உலகத்தில் நடக்கக்கூடிய எல்லா செயல்களையும் அறிந்து கொள்ளக்கூடிய நிலை மேலும் அவர் வீட்டு அருகில் உள்ளவர்களுடைய நிலையும் அறிந்து கொள்ளக்கூடிய நிலை இந்த ஜோதிட சாஸ்திரத்தின் மூலம் நவகிரகங்களால் அழகாக இந்த சாஸ்திரத்தில் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.
ஒரு ஆலயத்தில் நவகிரகங்கள் இருக்கிறது என்றால்
உலகமே அங்கே இருக்கிறது என்று பொருள்.
ஜோதிட சாஸ்திரம் என்பது விஞ்ஞான பூர்வமாக உண்மையான அற்புதமான சாஸ்திரமாகும்.
நாடி ஜோதிடம்
நாடி ஜோதிட முறையில் பல வகை இருக்கின்றன.
இதில் வைத்தீஸ்வரன் கோவில் நாடி ஜோதிடம் என்ற அற்புதமான கணிதம் வள்ளுவர் குல ஜோதிடர்களால் பாதுகாத்து தலைமுறை தலைமுறையாக சொல்லக்கூடிய ஓலை ஜோதிட முறையாகும்.
நாடி ஓலையை வைத்து முன் ஜென்மம் இந்த ஜென்மத்திலும் நீங்கள் எவ்வாறு செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் முன் ஜென்மத்தில் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நடந்து கொண்ட விதம் எவ்வாறு இந்த ஜென்மத்தில் நீங்கள் எவ்வாறு வாழப் போகிறீர்கள் இதற்குரிய தீர்வுகள் என்ன பரிகாரங்கள் என்ன என்று விலாவாரியாக சொல்லக்கூடிய அற்புதமான ஓலைச்சுவடிகளை கொண்ட முறை நாடி ஜோதிடர் முறையாகும்.
மேலும் வேறு சில நாடி ஜோதிடங்களும் உண்டு..
சந்திர நாடி முறை இது ஜோதிடத்தின் சந்திரனை மையமாக வைத்து சொல்லக்கூடிய முறையாகும் இது ஓலையால் சொல்லப்பட்ட முறை அல்ல..
சனி நாடி முறை சனி பகவானை மையமாக வைத்து அவருடைய கோச்சார காலத்தில் இயங்கக்கூடிய இயக்கத்தை வைத்து சொல்லக்கூடிய முறையாகும்.
குரு நாடி குருபகவான் இயக்கத்தை வைத்து ஜோதிட சாஸ்திரத்தில் சொல்ல கூடிய முறையாகும்.
பிறகு நந்தி நாடி
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களை நான்கு திசைகளாக பிரித்து எந்தந்த திசையில் இவ்வாறு பலன்கள் நடக்கும் என்று சொல்லக்கூடிய முறையாகும்.
இவ்வாறு பற்பல முறையில் முன்னோர்களால் சித்தர்கள் சொல்லிய கணிதத்தின் படி நாடி என்று பெயர் வைத்து பல முறைகளை ஜோதிட சாஸ்திரத்தில் கொண்டுவரப்பட்ட நிலையே ஆகும்.
திருமணப் பொருத்தம்
ஆண் பெண் இருவர் ஜாதகத்தை வைத்து, கணிதம் செய்து இருவருக்கும் உள்ள நட்சத்திரப் பொருத்தம், கிரக பொருத்தம், பாதசாரப் பொருத்தம், கிரக சேர்க்கை பொருத்தம், இருவருக்கும் உள்ள தோஷங்கள் அதனுடைய நிலை, திசை புத்தியின் நிலைபாடு, குடும்ப வாழ்க்கையில் இருவருடைய பொருத்தம், இவ்வாறு பொருத்தத்தை துல்லியமாக முடிவு செய்கின்றோம்.
சந்திர நாடி
பிறந்த தேதி நேரம் இவை அனைத்தையும் வைத்து இப்பொழுது அவருடைய மனநிலை எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது என்பதை காண்பது அதற்குரிய கணிதம். சந்திரன் என்பது ஒவ்வொருவருடைய மனதைக் தெளிவாக குறிக்கக்கூடிய கிரகமாகும்.
மருத்துவ ஜோதிடம்
ஒருவரின் பிறந்த தேதி நேரத்தை வைத்து ஜாதகம் கணித்து, அவருடைய உடல் ரீதியாக என்ன பாதிப்புகள் நடந்து கொண்டிருக்கிறது அதை எவ்வாறு சரி செய்வது என்பதை பார்ப்பது மருத்துவ ஜோதிட முறையாகும். மருத்துவ ஜோதிடத்தின் மூலம் தனது வாழ்நாளில் ஏற்படக்கூடிய நோய் என்ன என்பதை அறிந்து கொள்ள முடியும், பிறகு அதற்குரிய தீர்வு என்ன என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.
ஜாமக்கோள் பிரசன்னம்
ஜாமக்கோள் பிரசன்னத்தில் நீங்கள் ஒரு கேள்வியை கேட்டு அந்தக் கேள்விக்கு உரிய சம்பவங்கள் எப்பொழுது நடக்கும் என்பதை அறிந்து கொள்ள முடியும், இதன் மூலம் ஜாதகம் இல்லாதவர்களும் பிரசன்ன மூலமாக தங்களுடைய பலாபலன்களை அறிந்து கொள்ள முடியும். நீங்கள் கேட்கக் கூடிய கேள்வி தான் அதற்குரிய தீர்வு பிரசன்னத்தின் மூலமாக கிடைக்கும் கேள்வியே பிரசன்னம் ஆகும்.
தாம்பூல பிரசன்னம்
வெற்றிலை வாங்கி வந்து வெற்றிலையை வைத்து பிரசன்னம் பார்ப்பது தங்கள் குலதெய்வம் நிலை என்ன என்பதை மற்றும் பல கேள்விகளை கேட்டு அறிந்து கொள்ள முடியும்.
நேரில் வர முடியாதவர்கள் குலதெய்வத்தை மனதில் நினைத்து ஒரு எண் சொல்லி அதற்குரிய என்னை தாம்பூலமாக எடுத்து பிரசன்னமாக உங்களுக்கு பலன் சொல்ல முடியும்.
தேவ பிரசன்னம்
தங்களுடைய குலதெய்வத்தின் நிலை அறிய அந்த குலதெய்வம் தற்பொழுது எவ்வாறு செயல்பாட்டில் இருக்கிறது அதனுடைய சக்தி என்ன உங்களுக்கு குலதெய்வத்தின் சக்தி வேலை செய்கிறதா என்பதை சோலி மூலமாக கண்டறிவது குலதெய்வ பிரசன்னம் ஆகும்.
குலதெய்வ பிரசன்னம் என்பது தேவப்பிரசன்னம் ஆகும்.
இதேபோல் சோழி பிரசன்னம் கணிதமும் செய்து வாழ்க்கை நிலைகளை பார்க்க முடியும்.
எண் கணிதம்
எங்களிடம் எண் கணிதம் என்பது கிரகங்களுடைய ஆதிக்கத்தை மையமாக வைத்து கணிக்க கூடிய ஜோதிட சாஸ்திரத்தில் ஒரு பகுதி எண் கணித சாஸ்திரமாகும். அவருடைய எந்த கிரகத்தின் உடைய ஆதிக்கத்தை பெற்று இருக்கிறது அப்படி பெற்று இருக்கின்ற போது அந்த கிரகம் அவருக்கு நன்றாக இருக்கிறதா அதற்கு தகுந்தவாறு அவருடைய என்னை பயன்படுத்தி அவருடைய பெயரில் இருக்கக்கூடிய எழுத்துக்களை எண்களாகக் கொண்டு அவருடைய கிரகத்தினுடைய காரகத்துவம் அவருடைய எண்ணங்களும் இப்படித்தான் இருக்கும் இதனால் இவர் வெற்றி பெறுவார் என்று சொல்லுவது என் கணித ஜோதிடமாகும்.
கைரேகை ஜோதிடம்
அரசாங்கமே ஏற்றுக் கொள்ளக்கூடியது கைரேகை
ஆதாருக்கு கைரேகை வேண்டும் ஒரு சம்பவம் நடக்கிறது என்றால் கைரேகை பதிவை எடுப்பார்கள் கைரேகை ஜோதிடம் என்பது அவருக்கு மட்டுமே பேசக்கூடிய கலையாகும் ஏனென்றால் கைரேகை எப்பொழுதும் மாறாதது என்பதை இதன் மூலம் நான் தெரிந்து கொள்கிறோம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் கைரேகை அவருக்கு மட்டும் பலன்களை சொல்லக்கூடிய நிலையைக் குறிப்பது கைரேகை ஜோதிடமாகும்.